15 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டுப்பாளையம் அருகே உள்ள பெள்ளாதி குளம் நிரம்பி வடிவதால் விவசாயிகள் மகிழ்ச்சி

கோவை: கடந்த சில வாரங்களாக தீவிரம் அடைந்துள்ள வடகிழக்கு பருவமழையால், 15 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியுள்ள திப்புசுல்தான் கட்டிய பெள்ளாதி குளம் நிரம்பி தண்ணீர் தடுப்பனையில் வடிவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கோவை: கடந்த சில வாரங்களாக தீவிரம் அடைந்துள்ள வடகிழக்கு பருவமழையால், 15 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியுள்ள திப்புசுல்தான் கட்டிய பெள்ளாதி குளம் நிரம்பி தண்ணீர் தடுப்பனையில் வடிவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பெள்ளாதி குளம் சுமார் 15 ஏக்கர் பரப்பளவு கொண்டது, திப்புசுல்தான் கட்டிய பாரம்பரிய இந்த குளம் காரமடை ஒன்றியத்தின் கிழக்கு பகுதி விவசாயத்திற்கு முக்கிய நீராதாரமாக உள்ளது. 

கட்டாஞ்சி மலை, பெரியநாயக்கன்பாளையம், பாலமலை வனத்தில் உருவாகும் ஏழெருமைப்பள்ளம் போன்ற நீராதங்களை ஒருங்கினைத்து இந்த குளம் உருவாக்கபட்டது. இந்த குளம் நிரம்பினால் நிலத்தடி நீரினை நம்பியுள்ள சுமார் நான்காயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெரும்.



இந்த நிலையில் கடந்த பதினைந்து ஆண்டுகளாக வறண்டு கிடந்த இந்த பெள்ளாதி குளம் தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் அதன் முழு கொள்ளவையும் எட்டியுள்ளதை அடுத்து தண்ணீர் உபரியாக தடுப்பனையில் வழியத்துவங்கியுள்ளது. 

பருவமழைக்கு முன்பு குளத்தை தூறுவறிய நிலையில் தற்போது பதினைந்து ஆண்டுகளுக்கு பின் பெள்ளாதி குளம் நிரம்பியுள்ளது. இதன் மூலம் இந்த குளத்தினை சுற்றியுள்ள சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகள் நீரோட்டம் பெற்றுள்ளதால் ஓராண்டிற்கும் மேல் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் பெறும் என்பதால் குளத்தை சுற்றியுள்ள விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் குளத்தில் இருந்து வெளியேறும் உபரி நீரானது மீண்டும் ஏழு எறுமைப்பள்ளம் வழியே பவானி ஆற்றில் கலந்து பவானி சாகர் அணையை அடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....