வால்பாறையில் அனுமதியின்றி காட்டேஜில் பார் நடத்திய உரிமையாளர் தலைமறைவு; இருவர் கைது

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த ரொட்டிக்கடை பகுதியில் ஷேக்கல் முடி சாலையில் உள்ள காட்டேஜில் சட்ட விரோதமாக பார் நடத்தி அதன் மூலம் மது விற்பனை செய்து வருவதை உளவு பிரிவு காவல்துறையினர் கண்டு பிடித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த ரொட்டிக்கடை பகுதியில் ஷேக்கல் முடி சாலையில் உள்ள காட்டேஜில் சட்ட விரோதமாக பார் நடத்தி அதன் மூலம் மது விற்பனை செய்து வருவதை உளவு பிரிவு காவல்துறையினர் கண்டு பிடித்தனர். 

இதனை தொடார்ந்து வால்பாறை காவல் ஆய்வாளர், பாலமுருகன் ரொட்டிக்கடை பகுதியில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு செயல்பட்டு வந்த ஹனிபீ காட்டேஜ் (Honey bee) முறையான அனுமதி இன்றி இயங்குவது கண்டு பிடிக்கப்பட்டது. மேலும், அங்கு அனுமதியின்றி சட்ட விரோதமாக பார் நடத்துவதும் கண்டு பிடிக்கப்பட்டது. 



அதை தொடர்ந்து, ஹனிபீ காட்டேஜில் வேலை செய்து வந்த அஜீத் (22), அக்சய் (22) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஃபிலிப் (43) என்பவரையும் தலைமறைவான காட்டேஜ் உரிமையாளர் ஜார்ஜ் என்பவரையுரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

மேலும், வால்பாறை பகுதியில் காட்டேஜ்களில் அனுமதியின்றி சட்ட விரோதமாக பார் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வால்பாறை காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....