குன்னூர்அருகே தேயிலை தோட்டத்தில் இறந்த நிலையில் சிறுத்தை

நீலகிரி: குன்னூர் அருகே உள்ள கிளன்டேல் தனியார் தேயிலை எஸ்டேட்டில் வேளை செய்து வரும் தோட்ட தொழிலாளர்கள் சிறுத்தை ஒன்று புதருக்குள் காயத்துடன் இறந்து கிடப்பதை கண்டு வனத்துறைக்கு இன்று தகவல் கொடுத்தனர்.

நீலகிரி: குன்னூர் அருகே உள்ள கிளன்டேல் தனியார் தேயிலை எஸ்டேட்டில் வேளை செய்து வரும் தோட்ட தொழிலாளர்கள் சிறுத்தை ஒன்று புதருக்குள் காயத்துடன் இறந்து கிடப்பதை கண்டு வனத்துறைக்கு இன்று தகவல் கொடுத்தனர். 

வனச்சரகர் சரவணன் தலைமையில் வனவர் பெலிக்ஸ் மற்றும் வனக்காப்பாளர்கள் மணிகன்டன் நாகராஜ் விக்ரம் மற்றும் லோகேஷ்வரன் (APW)  சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து சிறுத்தையின் உடலை பார்வையிட்டனர். 

ஆய்வு செய்த வனத்துறை அதிகாரிகள், சிறுத்தை இறந்ததற்கான காரணம் இரு சிறுத்தைகள் இடையே நடந்த மோதலாக இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளனர்.

இறந்த சிறுத்தையானது 5 வயது மிதக்கத்தக்க ஆண் சிறுத்தை என  கால்நடை மருத்துவர் ராஜ் முரளி  பிரேத பரிசோதனைக்கு பின்னர் தெரிவித்தார். 

இறுதியில், சிறுத்தையின் உடலில் இருந்து உடர்கூறுகள் எடுத்த பின்பு வனத்துறை அதிகாரிகள் முன்னிலையில் அதே இடத்தில் உடலை தீயிட்டு எரித்தனர்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....