நீலகிரி : நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து கெத்தை செல்லும் சாலையின் அருகே வனப்பகுதிகளில் இருந்து வெளியேறி சாலைகளில் உலா வரும் யானைகளால் தொடர் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

கடந்த வாரம், வனப்பகுதிகளில் இருந்து வெளியேறிய யானை கூட்டம் இவ்வழியாக வந்த அரசுப் பேருந்து மற்றும் தனியார் வாகனங்களை வழிமறித்ததால் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், நேற்று மஞ்சூர் - கெத்தை சாலையின் நடுவி்ல் கூட்டமாக நின்ற யானைகள் திடீரென அவ்வழியே வந்த வாகனங்களை விரட்டியாதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதன் காரணமாக சுமார் 3 மணி நேரம் வரை வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. சாலையின் குறுக்கே நின்ற யானைகள் அங்கிருந்து நகரும் வரை வாகனங்கள் காத்திருந்தன.
எதிர்பாராத விதமாக, ஒரு யானை ஆக்ராேஷம் அடைந்ததால், வாகனங்களை தாக்க முற்பட்டது.
அதை தொடர்ந்து, வரும் நாட்களில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கும் முன் இந்த சாலையில் அடிக்கடி முகாமிடும் யானைகள் கூட்டத்தினை வனத்துறையினர் கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிகள் துரத்த வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.