சிறப்பு அதிரடிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட்க்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

கோவை : தமிழ் நாடு சிறப்பு அதிரடிப்படை போலீசாரால் நேற்று கோவையில் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட்க்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவை : தமிழ் நாடு சிறப்பு அதிரடிப்படை போலீசாரால் நேற்று கோவையில் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட்க்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கேரள மாநிலம் அட்டப்பாடி வனப்பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தண்டர் போல்ட் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த மணிவாசகம், ,அரவிந்த், ரமா,ப்சுரேஷ் ஆகிய 4 பேர் கொல்லப்பட்டனர். 

இந்நிலையில், தலைமறைவான மாவோயிஸ்ட்டுகளை தேடும் பணியில் தமிழக மற்றும் கேரள மாநில போலீசார் தனித்தனியாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இன்று தமிழக வனப்பகுதியில் கோவை ஆனைகட்டி அருகே இருக்கும் முழக்கன்கல் வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பது சிறப்பு அதிரடிப் படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சிறப்பு அதிரடிப்படை போலீசார் அந்த பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது காயமடைந்த நிலையில் இருந்த மாவோயிஸ்ட் தீபக்கை உடன் இருந்த 3 மாவோயிஸ்டுகள் அழைத்து வந்தது தெரியவந்தது. 

அப்போது, சிறப்பு அதிரடிப்படை போலீசாரை கண்ட மாவோயிஸ்டுகள் தீபக்கை அங்கேயே விட்டுவிட்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் தலைமறைவாகினர்.



இந்நிலையில் படுகாயத்துடன் உடல் சோர்வுற்ற நிலையில் இருந்த தீபக்கை கைது செய்த சிறப்பு அதிரடிப்படை போலீசார் அவரை அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வெளியே தூக்கி வந்தனர். பின்னர் அவரை வீரபாண்டி கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில

வைத்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. 

பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....