கோவை: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, 818 பயனாளிகளுக்கு ரூ.4.44 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கோவை: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, 818 பயனாளிகளுக்கு ரூ.4.44 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கோவை மாவட்டம், ஆலாந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் இன்று (நவ 09) தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இம்முகாமில் அமைச்சர் அவர்கள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு 818 பயனாளிகளுக்கு ரூ.4.44 கோடி அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும், ஆலாந்துறை பேரூராட்சியில் பரவி வாழும் பழங்குடியின மக்களுக்கு, கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு விலையில்லா கறவை மாடுகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.
இம்முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் இராம துரைமுருகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், வருவாய் கோட்டாட்சியர் (தெற்கு) தனலிங்கம், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) துவாரகநாத் சிங், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்(மகளிர் திட்டம்) செல்வராசு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மணிமொழி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பிரபாகரன், மாவட்ட சமூக நல அலுவலர் தங்கமணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கமணி, வட்டாட்சியர்(பேரூர்) ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.