எல்.ஜி நிறுவனத்திற்கு ஜப்பானின் உயரிய விருது..! உலகின் இரண்டாவது கம்பரஷர் தயாரிப்பாளராவதே இலக்கு - ஜெய்ராம் வரதராஜ்

கோவை: கோவையை சேர்ந்த எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் நிறுவனத்திற்கு ஜப்பானின் உயரிய விருதான 'டேமிங் 2019' விருது வழங்கப்பட்டுள்ளது.

கோவை: கோவையை சேர்ந்த எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் நிறுவனத்திற்கு ஜப்பானின் உயரிய விருதான 'டேமிங் 2019' விருது வழங்கப்பட்டுள்ளது.

கோவையை அடித்தளமாக கொண்ட எல்.ஜி எக்யூப்மெண்ட்ஸ் நிறுவனம் சர்வதேச அளவில் தொழிலக மற்றும் கட்டுமானத்துறைக்கு தேவையான கம்ப்ரஷர்களை உற்பத்தி செய்து வருகிறது.

இந்த நிறுவனம் கடந்த 60 ஆண்டுகளாக ஒட்டுமொத்த தர மேலாண்மையை கடைபிடித்து வந்ததால் ஜப்பான் நாட்டில் தொழிலகங்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான 'டேமிங் 2019' என்ற விருதை பெற்றுள்ளது. இந்த விருதை நவம்பர் 6ம் தேதி டேமிங்க் பரிசு கமிட்டியின் தலைவர் ஹிரோக்கி நகனிஷி, எல்.ஜி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜெய்ராம் வரதராஜிடம் வழங்கினார்.



இந்த நிலையில், கோவையில் இன்று ஜெய்ராம் வரதராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், இந்த விருதினை அனைத்து எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் பணியாளர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். ஒட்டுமொத்த மேலாண்மை எங்களது நிறுவனத்தை அனைத்து பங்குதாரர்களிடையேயும், வாடிக்கையாளர்களிடையேயும் மேம்பட்ட நிறுவனமாக உயர்த்த உதவியது என்றார்.

2008ம் ஆண்டில் தொடங்கிய எல்ஜியின் ஒட்டுமொத்த தர மேலாண்மையானது, 2014ம் ஆண்டு முதல் பலனளிக்க தொடங்கியதாகவும் 2027ம் ஆண்டுக்குள் எல்ஜி நிறுவனம் உலகின் இரண்டாவது மாபெரும் கம்பரஷர் தயாரிப்பாளராக இருக்க வேண்டும் என்பதே இலக்கு என்று கூறிய அவர், மனிதவள மேம்பாட்டாலும், தொடர்ச்சியான பல்வேறு வகையிலும் மேம்படுத்தப்பட்ட நடவடிக்கையாலும் இது சாத்தியமாகும் என்று தெரிவித்தார்.



மேலும், சர்வதேச அளவில் எல்ஜி நிறுவனம் 15 மில்லியன் டாலர் மதிப்புடன் செயல்படுகிறது. இந்தியாவில் 5 சதவீத விற்பனையும் மற்ற நாடுகளில் 95 விற்பனையும் உள்ளது. எனவே, இந்த பொருளாதார வீழ்ச்சி எங்கள் நிறுவனத்தில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றவர், சமூகப் பொறுப்பு திட்ட அடிப்படையில் வெள்ளலூர் பகுதியில் பள்ளி ஒன்றை நடத்தி வருவதாகவும் அதில், 50 சதவீதம் பேர் ஏழைக்குழந்தைகள் படிக்கின்றனர் என்றும் இந்த பள்ளியின் கட்டுமானத்திற்கும், அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கும் ரூ.25 கோடி செலவாகியுள்ளதாக கூறினார்.

Newsletter

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...