மன நலனே மகளிருக்கு அழகு; யோகா மூலம் மனரீதியான பாதிப்புகளை தவிர்க்க முடியும் - ஷர்மிளா சந்திரசேகர்

கோவை: மன நலனே மகளிருக்கு அழகு எனவும் யோகா மற்றும் தியானம் மூலமாக மகளிர் மன ரீதியான பாதிப்புகளை தவிர்க்க முடியும் என்று கோவை மருதமலை அடிவாரத்தில் நடைபெற்ற மகளிர் மன முன்னேற்றப் பயிற்சி நிகழ்ச்சியில் ஆலயம் அறக்கட்டளை இயக்குனர் ஷர்மிளா சந்திரசேகர் தெரிவித்தார்.


கோவை: மன நலனே மகளிருக்கு அழகு எனவும் யோகா மற்றும் தியானம் மூலமாக மகளிர் மன ரீதியான பாதிப்புகளை தவிர்க்க முடியும் என்று கோவை மருதமலை அடிவாரத்தில் நடைபெற்ற மகளிர் மன முன்னேற்றப் பயிற்சி நிகழ்ச்சியில் ஆலயம் அறக்கட்டளை இயக்குனர் ஷர்மிளா சந்திரசேகர் தெரிவித்தார்.

கோவை மருதமலை அடிவாரத்தில் மலைவாழ் மக்களுக்கான மன முன்னேற்ற பயிற்சி மற்றும் மகளிர் சுய உதவி குழுவினருக்கான உளவியல் ஆலோசனை முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் ஆலயம் நல்வாழ்வு அறக்கட்டளை இயக்குனர் டாக்டர் ஷர்மிளா சந்திரசேகர் பேசுகையில், மலைவாழ் மக்கள் மனதை மேம்படுத்தி வாழ பழகிக் கொள்ள வேண்டும் எனவும் மன நலனே மகளிருக்கு உண்மையான அழகை தரும் என்றார். மன அழுத்தம், குடும்ப பொருளாதார பிரச்சினை, வேலைவாய்ப்பின்மை போன்ற பிரச்சினைகளால் மலைப்பகுதியில் வசிக்கும் மகளிர் பாதிக்கப்பட்டு வருவதாகவும், மனதை கையாளும் யோகா, தியான பயிற்சியால் கடுமையான சூழலை தவிர்க்க முடியும் என்று கூறினார்.

மேலும், குடும்பத்தை வழி நடத்தவும், பொருளாதார நிலையை சமாளிக்கவும் மன பயிற்சியின் மூலம் ஆற்றல் பெற முடியும் என கூறிய அவர், சுய உதவி குழு மூலமாக சுயதொழில் செய்து முன்னேறலாம் என தெரிவித்தார். மன தைரியம் உள்ளவர்களுக்கு தற்கொலை எண்ணம் தோன்றாது எனவும் குடும்ப பிரச்சனையால் கவலையாக இருந்தால் எந்த பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்காது என்றவர், பிரச்சனை என்ன? என அறிந்து தீர்வுகாண மனத்திறன் தேவைப்படுவதாகவும் யோகா மற்றும் தியானம் மூலமாக மகளிர் மன ரீதியான பாதிப்புகளை தவிர்க்க முடியும் என்றார்.

பெண்கள் எந்த சூழலையும் சமாளிக்கும் ஆற்றலை பெற வேண்டும் என்றவர், டிவி நாடகங்களை தொடர்ந்து பார்ப்பதால் பெண்களுக்கு மனகுழப்பம், பதட்ட நிலை ஏற்படுகிறது எனவும் இந்த மோகத்தில் இருந்து விடுபட வேண்டும் என்று கூறினார்.

இரு நாள் நடந்த இந்த பயிற்சி முகாமில் மகளிர் குழு மற்றும் மலைவாழ் மக்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனை வழங்கப்பட்டது. பயிற்சியில் மனாஸ் அறக்கட்டளை நிர்வாகி சசி பிரபா உட்பட பலர் கலந்து கொண்டனர். பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்களும்,பரிசுகளும் வழங்கப்பட்டது.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....