நீலகிரியில் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்த சிறுத்தை..! வனத்துறையினர் விசாரணை

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கிளன்டேல் தனியார் தேயிலை தோட்டத்தில் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்த சிறுத்தையை கைப்பற்றிய வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கிளன்டேல் தனியார் தேயிலை தோட்டத்தில் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்த சிறுத்தையை கைப்பற்றிய வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

குன்னூர் அருகே உள்ள கிளன்டேல் தனியார் தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் தோட்ட தொழிலாளர்கள், அப்பகுதியில் சிறுத்தை ஒன்று காயத்துடன் இறந்து கிடப்பதைக் கண்டு வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.



இதன் பேரில் குன்னுார் வனச்சரகர் சரவணன் தலைமையில் வனவர் பெலிக்ஸ் மற்றும் வனக்காப்பாளர்கள் மணிகண்டன் நாகராஜ், விக்ரம் மற்றும் லோகேஷ்வரன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுத்தையின் உடலை பார்வையிட்டனர்.



இரு சிறுத்தைகள் இடையே நடந்த மோதலில் சிறுத்தை இறந்திருக்கலாம் எனவும் இறந்த ஆண் சிறுத்தைக்கு 5 வயது இருக்கும் என்று கூறப்படுகிறது



பின்னர், கால்நடை மருத்துவர் ராஜ் முரளி வரவழைக்கப்பட்டு பிரேத பரிசோதனை நடந்த பின்னர், உடலை தீயிட்டு எரித்தனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...