நிலம் இந்துக்களுக்கே சொந்தம் என்றும் அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் மாற்று நிலம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு? என்பது தொடர்பான வழக்கில், பாபர் மசூதி இருந்த இடம் முழுக்க முழுக்க தங்களது என இஸ்லாமிய அமைப்புகள் நிரூபிக்கவில்லை எனவும் இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் மாற்று நிலம் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதேபோல, வக்பு போர்டு ஏற்கும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் தர மத்திய அரசு, உத்தரப்பிரதேச அரசுகளுக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், அலகாபாத் உயர்நீதிமன்றம் நிலத்தை 3ஆக பிரித்துக்கொடுத்தது தவறு என்று கருத்து தெரிவித்துள்ளது.
மேலும், சர்ச்சைக்குரிய இடத்தில் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளையை 3 மாதங்களுக்குள் மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்றும் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை புதிதாக அமைக்கப்படவுள்ள அறக்கட்டளையிடம் ஒப்படைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.