டெல்லி: பாபர் மசூதி காலியிடத்தில் கட்டப்படவில்லை எனவும் அந்த இடத்தில் முன்பே கட்டடம் ஒன்று இருந்ததாகவும் அங்கிருந்த கட்டடம், இஸ்லாமிய கட்டுமானம் அல்ல என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு? என்பது தொடர்பான வழக்கில், 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஒரே தீர்ப்பை வழங்கி உள்ளனர்.
அதில்,ஷியா வாரியம் மற்றும் வக்பு சன்னி அமைப்பின் மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. வரலாறு, மதம் கடந்த வழக்கு இது. ஒரு மதத்தின் நம்பிக்கை மற்ற மதத்தின் நம்பிக்கையை தடுப்பதாக இருக்கக் கூடாது. இறை நம்பிக்கைக்குள் உச்சநீதிமன்றம் செல்வது தேவையற்றது என கருதுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அயோத்தியில் பாபரால் மசூதி கட்டப்பட்டதை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது என்று 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. சர்ச்சைக்குரிய இடத்தில் 1949ல் ராமர் சிலை வைக்கப்பட்டது. ஒருவரின் மத நம்பிக்கையில் மற்றொருவரின் மத நம்பிக்கை தலையிட முடியாது. நிலத்துக்கு உரிமை கோரிய நிர்மோஹி அகாரா மனுவில் ஆதாரங்கள் இருப்பதாகத் தெரியவில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.