ஜம்மு காஷ்மீரில் வேவு பார்ப்பதற்காக கடத்தி கொண்டுவரப்பட்ட சுமார் 150 புறாக்களை காஷ்மீர் போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புறாக்கள் அனைத்தும் அரசு சாரா அமைப்பிடம் அளிக்கப்பட்டன. மேலும் இந்த கடத்தல் குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.