கோவை: உத்தர பிரதேசம் மாநிலம், அயோத்தியில் ராமஜென்மபூமி, பாபர் மசூதி அமைந்திருந்ததாக கூறப்படுகிற சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தமானது..? என்கிற தீர்ப்பு நாளை உச்சநீதிமன்றத்தில் வெளியாகவுள்ளது.

இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தமிழக சட்டம் ஒழுங்கு காவல்துறை இயக்குனர் ஜே.கே
திரிபாதி உத்தரவின் பேரில் பாதுகாப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல, ஏற்கனவே அனைத்து காவல் எல்லைகளிலும் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு தொடர்பாக "இரு தரப்பினர்" மத்தியிலும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
இப்படியிருக்க, கோவை மாநகர காவல் எல்லை மற்றும் மாவட்ட காவல் எல்லை பகுதிகளில்
நாளை தீர்ப்பு வர உள்ளது என்கிற அறிவிப்பு வெளியானதிலிருந்து பாதுகாப்பு பணிகள் குறித்து போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
முக்கியமாக, ரயில் நிலையம், விமான நிலையம், பேருந்து நிலையம் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தீவிர ரோந்து பணிகளை வெள்ளிக்கிழமை இரவு முதலே மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், வழக்கமாக இரவு 11 மணிக்கு மேல் மூடப்படும் கடைகள் கூட விரைவில் மூட போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.
அதேபோல, கோவை மாநகரில் காவல்துறை உயரதிகாரிகள் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.
குறிப்பாக, வாட்ஸ்அப் மற்றும் சமூக ஊடகங்களில் பொய்யான வதந்திகளை கிளப்பி சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் எச்சரித்துள்ளனர்.
அதேபோல, கோவை மாநகரில் உள்ள கோயில்கள் மற்றும் மசூதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் எனவும் காவல்துறை வட்டாரத்தினர் தெரிவித்துள்ளனர்.