கோவை: கோவை தெற்கு தீயணைப்பு துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ரயில் நிலையம் எதிரே உள்ள தெற்கு தீயணைப்பு துறை அலுவலகத்தில் மாவட்ட அலுவலர், மற்றும் இணை இயக்குனர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த அலுவலகத்தின் கீழ் கோவை தெற்கு உட்பட வடக்கு, கணபதி, பீளமேடு, பொள்ளாச்சி, வால்பாறை, மேட்டுப்பாளையம், அன்னூர், சூலூர், மற்றும் கிணத்துக்கடவு என 10 நிலையங்கள் உள்ளது.
இந்த பத்து நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தீயணைப்பு எல்லைக்குள் வரும் அனைத்து பிரிவுகளுக்கும் முறையான அனுமதிகள் மாவட்ட அலுவலர்களிடம் பெறவேண்டும். இப்படியிருக்க, மாவட்ட அலுவலர் உரிமம் தொடர்பான விவகாரத்தில் லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, தற்போது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தெற்கு தீயணைப்பு நிலையத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விசாரணைகளின் முடிவில் மற்ற விவரங்கள் தெரியவரும்.