நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் 1500க்கும் மேற்பட்ட வாக்காளர்களை கொண்ட 3 இடங்கள் இரண்டாகப் பிரிக்கப்படவுள்ளதாகவும் முதன் முறையாக இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

உள்ளாட்சித் தேர்தலுக்கான அனைத்து கட்சி கூட்டம் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 4 ஊராட்சி ஒன்றியங்கள், 4 நகராட்சிகள் மற்றும் 11 பேரூராட்சிகளில் தேர்தல் நடைபெற உள்ளதாக கூறினார்.
தற்போது, தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, ஊரகப் பகுதிகளில் அமைக்கப்படும் வாக்குச்சாவடிகளின் ஒரு வாக்குச்சாவடிக்கு 1,500 வாக்காளர்களுக்கு மிகவும், நகர்ப்புறப் பகுதிகளில் ஆயிரத்து 500 வாக்காளர்களுக்கு மிகாமலும் வாக்குச் சாவடி அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், ஊரக கூடலூர், குன்னூர் பகுதிகளில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இடங்களில் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இருந்தால் அதை இரண்டு கட்டமாக பிரிக்கப்படும் என தெரிவித்தார்.
பின்னர், கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சியினர் வாக்காளர்கள் பற்றிய தகவல்களை அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்த பின், தேர்தலுக்கான தகவல்களை இணையதளம் வாயிலாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.