தமிழக - கேரள எல்லையில் மாவோயிஸ்ட் ஒருவர் துப்பாக்கிச் சூடு பயிற்சி பெறும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
தமிழக - கேரள எல்லையில் மாவோயிஸ்ட் ஒருவர் துப்பாக்கிச் சூடு பயிற்சி பெறும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

சமீபகாலமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மாவோயிஸ்ட்டுகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதாக உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை அருகே உள்ள கேரள மாநிலமான பாலக்காடு மாவட்டத்தில் தண்டர்போல்ட் போலீசாருக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொள்ளப்பட்டனர். மேலும், அக்குழுவில் இருந்த மூன்று மாவோயிஸ்ட்டுகள் தப்பிச்சென்றனர்.
இதில் மாவோயிஸ்ட் தீபக் என்பவர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நிலையில், வனப்பகுதியில் தலைமறைவாகியுள்ளார். ஆகவே தலைமறைவான 3 பேரையும் கேரள மாநில தண்டர் போல்ட் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்நிலையில், மாவோயிஸ்ட் தீபக் துப்பாக்கி பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. மேலும், என்கவுண்டர் செய்யப்பட்ட மாவோயிஸ்ட்டுகளிடம் இருந்த பென் டிரைவ்களில் இந்த புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.