ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழும் குழந்தைகளை காப்பாற்ற புதிய கருவி கண்டுபிடிப்பு..!

கோவை: ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழும் குழந்தைகளை காப்பாற்ற புதிய கருவி ஒன்றை உருவாக்கியுள்ள கோவை தொழில் அதிபர் அதற்கு சுர்ஜித் நினைவாக HOS - (HANDS OF SURJITH) என பெயரிட்டுள்ளார்.

கோவை: ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழும் குழந்தைகளை காப்பாற்ற புதிய கருவி ஒன்றை உருவாக்கியுள்ள கோவை தொழில் அதிபர் அதற்கு சுர்ஜித் நினைவாக HOS - (HANDS OF SURJITH) என பெயரிட்டுள்ளார்.

கடந்த மாதம் திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த சுஜித் வில்சன் என்ற இரண்டு வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்து ஐந்து நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டான்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து வல்லுநர்களும், பொறியாளர்களும், மாணவர்களும் மேலும் ஒரு சுஜித்திற்கு இது போல் நடக்கக் கூடாது என்று ஆழ்துளை கிணறுகளில் விழும் குழந்தைகளை மீட்கும் கருவிகளை கண்டுபிடிக்க துவங்கிவிட்டனர்.



அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் தொழில் அதிபர் டி.நவநீத். இவர் சுர்ஜித் உயிரிழப்பை தொடர்ந்து, ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழும் குழந்தைகளை காப்பாற்ற கை போன்ற வடிவமைப்பில் புதிய கருவியை உருவாக்கியுள்ளார்.



இந்த செயற்கை கையுடன் இரு கயிறுகள் இணைக்கப்பட்டு, ஆழ்துளை கிணற்றுக்குள் விடப்படும். ஆழ்துளை கிணற்றுக்குள் விழும் குழந்தைகளின் கை எப்போதுமே மேல் நோக்கி தான் இருக்கும் என்பதால் இந்த செயற்கை பொம்மை கையை உள்ளே செலுத்தும் போது, அது குழந்தையின் கையை இறுக்கமாகப் பிடித்துக்கொள்ளும். அப்போது அந்த இரு கயிறுகளின் மூலம் குழந்தையின் கையில் முடிச்சு போட்டு எளிதாக மேலே தூக்கிவிடலாம். இந்த கருவி 300 அடி ஆழம் வரை செல்லக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.



மேலும், இந்த HOS கருவி 3 அடி அங்குலம் உள்ளதால், எந்த சிறு ஆழ்துளை கிணற்றுக்குள்ளும் எளிதில் சென்று குழந்தையை மீட்கும் திறன் பெற்றுள்ளது. இந்த கருவி சிறிய வடிவில் உள்ளதால் குழந்தையை மீட்கும் போது எந்தவிதமான மண்சரிவுவும் ஏற்படாது. மேலும், எளிய வடிவில் இருப்பதால் இந்த கருவியை பயன்படுத்தி யார் வேண்டுமானாலும் எளிதில் குழந்தைகளை காப்பாற்றி விடலாம்.

இது குறித்து நவ்நீத் கூறுகையில், இந்த கருவியை விட நூறு மடங்கு செயல்திறன் கொண்ட ஓர் கருவியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், அந்தப் புதிய கருவி ஓரிரு மாதங்களுக்குள் உருவாக்கப்படும் என்றார், மேலும், புதிதாக உருவாக்கப்படும் கருவியை ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கிய குழந்தையை மீட்கும் தன்னார்வ குழுவிற்கு இலவசமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், ஆழ்குழாய் கிணறுகளில் நேரும் இத்தகைய விபத்துகளை தடுக்க அரசு சில எளிய நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த கருவிக்கு HOS- (HANDS OF SUJITH) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதாவது, இனி ஏதாவது ஒரு குழந்தை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தால், அந்த குழந்தையை சுஜித்தின் கைகளே காப்பாற்றும் என்பது தான் இதன் பொருள். இந்த கருவியின் மூலம் இனிமேல் இதுபோன்ற ஒரு விபத்து நடக்காத வண்ணம் தடுக்க முடியும் என்று நவ்நீத் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக, பள்ளி, கல்லூரி, மாணவர்கள் தங்கள் நிறுவனங்களுக்கு அருகில் இருக்கும் ஆழ்குழாய் கிணறுகளை முறையாக மூடி அதை வீடியோ எடுத்து 9486976099 எண்ணிற்கு பகிர்ந்தால் அவர்களுக்கு தக்க சான்றிதழும், பரிசும் வழங்கப்படும் என நவநீத் கூறினார்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....