அன்னூரில் புதிய புறவழிச்சாலை திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் - சபாநாயகர் தனபால்

கோவை: அன்னூரில் வாகன நெரிசலைத் தவிர்க்க மறுசீரமைக்கப்பட்ட புதிய புறவழிச்சாலை திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என்று தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் தெரிவித்தார்.

கோவை: அன்னூரில் வாகன நெரிசலைத் தவிர்க்க மறுசீரமைக்கப்பட்ட புதிய புறவழிச்சாலை திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என்று தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் தெரிவித்தார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த அன்னூரில் தமிழக அரசின் கூட்டுறவுத் துறை சார்பில் புதியதாக சுமார் 37 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தின் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். பின்னர், பயனாளிகளுக்கு ரூ.2 கோடி மதிப்பிலான விவசாய கடன், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான கடன், தனிநபர் கடனுதவி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.



பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், அன்னூரில் ஏற்பட்டு வரும் கடுமையான போக்குவரத்து நெரிசல் தீர்வுகாணும் வகையில் புதியதாக மறுசீரமைக்கப்பட்ட புறவழிச்சாலை திட்டம் ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் அது பல்வேறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவதால், தாமதமானாலும் விரைவில் அன்னூருக்கு புறவழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.

மேலும், அன்னூர் அதிக அளவில் கிராமங்களைக் கொண்டதாக இருந்தாலும், அனைத்து கிராமங்களுக்கும் சாலை வசதிகள் போக்குவரத்து ஆகியவை பெற்று தன்னிறைவு அடைந்துள்ளதாகக் கூறிய சபாநாயகர் தனபால், அன்னூர், அவினாசி போன்ற பகுதிகளுக்காக ரூ.240 கோடி செலவில் கொண்டுவரப்பட்ட தனி குடிநீர் திட்டங்கள் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கோவை மண்டல கூட்டுறவு இணை பதிவாளர் பழனிச்சாமி, அன்னூர் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் அம்பாள் பழனிச்சாமி, ஒன்றிய துணை செயலாளர் சாய் செந்தில் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....