குன்னூர் அருகே கள்ள துப்பாக்கி வைத்திருந்த 3 பேர் கைது; வெடிமருந்து பொருட்கள் பறிமுதல்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கொலக்கொம்பை எஸ்டேட் பகுதியில் கள்ள துப்பாக்கிகள் வைத்து இருந்தாக 3 பேரை கொலக்கொம்பை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மற்றொருவரைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கொலக்கொம்பை எஸ்டேட் பகுதியில் கள்ள துப்பாக்கிகள் வைத்து இருந்தாக 3 பேரை கொலக்கொம்பை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மற்றொருவரைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.



குன்னூர் அருகே உள்ள கொலக்கொம்பை எஸ்டேட் பகுதியில் துப்பாக்கிகளுடன் மர்ம நபர்கள் சிலர் சுற்றித்திரிவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதிக்கு காவல் ஆய்வாளர் ஆறுச்சாமி, சிறப்பு காவல் துணை ஆய்வாளர் சரவணன் தலைமையில் காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, அப்பகுதியில் சுற்றித் திரிந்த பவானி எஸ்டேட் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, கரும்பாலத்தை சேர்ந்த ரமேஷ், சோலட்டி பகுதியை சேர்ந்த ரகு மூவரையும் பிடித்து வந்து கொலக்கொம்பை காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் அவர்களிடமிருந்து 2 நாட்டுத் துப்பாக்கிகள், 13 தோட்டாக்கள், 2 கத்திகள், 1 ஈட்டி, மற்றும் வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் வெடிமருந்து பொருட்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் மூவர் மீதும் வன விலங்குகள் வேட்டையாடுதல், அரசு அனுமதி பெறாமல் கள்ளத் துப்பாக்கி வைத்து இருத்தல் உள்ளிட்ட சட்டத்தின் கீழ் கைது செய்தனர்

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....