20 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு இலவச இணைய வசதி - கேரளா அரசு திட்டம்

கேரளாவில் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் 20 லட்சம் குடும்பங்களுக்கு இலவச இணையதள வசதி அளிக்க அந்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.


கேரளாவில் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் 20 லட்சம் குடும்பங்களுக்கு இலவச இணையதள வசதி அளிக்க அந்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

கேரள அரசின்‌ கே போன்‌ திட்டம்‌ என்பது அரசு சார்பில்‌ ஆப்டிக்‌ பைபர்‌ கேபிள்‌ மூலம்‌ மாநிலம்‌ எங்கும்‌ இணைய வசதி வழங்கும்‌ திட்டமாகும்‌. இந்த திட்டம்‌ கேரள மாநில தொழில்‌ நிதி ஆணையத்தின்‌ நிதி உதவியுடன்‌ அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன்‌ மாநிலம்‌ எங்கும்‌ ஆப்டிக்‌ “பைபர்‌ கேபிளை நிறுவ கேரள மின்சார வாரியம்‌ மற்றும்‌ வீடுகளுக்கும்‌ அலுவலகங்களுக்கும்‌ கேரள தொழில்நுட்பத்‌ துறை மூலம்‌ இணைப்பு வழங்கப்பட்டது.

இந்த கேபிள்கள்‌ மூலம்‌ இணைய சேவை வழங்குவோர்‌ மற்றும்‌ கேபிள்‌ டிவி சேவை வழங்குவோர்‌ இணைந்து வீடுகளுக்குச்‌ சேவை வசதியை அளிக்க உள்ளனர்‌. இதன்‌ மூலம்‌ மாநிலம்‌ எங்கும்‌ அதிக வேகம்‌ கொண்ட இணைய சேவையை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. அனைத்து மொபைல்‌

கோபுரங்களையும்‌ இணைக்கும்‌ பணி நடந்து வருகிறது.

இதுதொடர்பாக ட்விட்டரில் கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக் வெளியிட்டுள்ள பதிவில், கேரளாவில் இணையதள இணைப்பு, அடிப்படை உரிமையாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.



மேலும் 1,548 கோடி ரூபாய் மதிப்பில் கேரளா பைபர் ஆப்டிக் நெட்வொர்க் ஏற்படுத்த கேரள அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாகவும், இதன்மூலம் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் 20 லட்சம் குடும்பங்களுக்கு இணையதள வசதி இலவசமாக அளிக்கப்பட இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் திட்டம், 2020ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் நிறைவேற்றி முடிக்கப்படும் எனவும் அந்தப் பதிவில் தாமஸ் ஐசக் கூறியுள்ளார்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....