திருப்பூரில் காதலன் ஏமாற்றியதால் மனமுடைந்த கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் காதலன் ஏமாற்றியதால் மனமுடைந்த கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் காதலன் ஏமாற்றியதால் மனமுடைந்த கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்துள்ள குங்குமம் பாளையம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் பிருந்தா(18). இவர் பல்லடம் அரசு கலைக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (23). பிருந்தா மற்றும் சந்தோஷ் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிருந்தா தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பிருந்தா உயிரிழந்தார்.

இதனையடுத்து பிருந்தா உயிரிழப்பு குறித்து உறவினர்கள் கூறும் போது, சந்தோஷ் என்பவர் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதால் தீக்குளித்ததாக பிருந்தா கூறியதாக தெரிவித்தனர். மேலும், தீக்குளித்தது ஏன் என்றும், தன்னை ஏமாற்றியது சந்தோஷ் தான் என்று பிருந்தா கூறிய வீடியோவும் உள்ளதாக தெரிவித்தனர்.



பின்னர், பிருந்தாவின் உயிரிழப்பிற்கு காரணமாக இருந்த சந்தோஷ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிருந்தாவின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பல்லடம் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து, வழக்கு பதிவு செய்த பல்லடம் போலீசார், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...