நீலகிரியில் மழை பாதிப்பு சீரமைப்பு பணிகளுக்கு ரூ.82 கோடி நிதி ஒதுக்கீடு - மாவட்ட ஆட்சியர்

நீலகிரி: நீலகிரியில் பெய்த தொடர் மழை காரணமாக ஏற்பட்ட பாதிப்பு சீரமைப்பு பணிகளுக்கு, அரசு துறைகளுக்கு 82 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

நீலகிரி: நீலகிரியில் பெய்த தொடர் மழை காரணமாக ஏற்பட்ட பாதிப்பு சீரமைப்பு பணிகளுக்கு, அரசு துறைகளுக்கு 82 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.



நீலகிரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டதுடன் தடுப்பு சுவர்கள், வீடுகள் இடிந்து விழுந்தன. குறிப்பாக, முத்தோரை பாலாடா, எமரால்டு, அவலாஞ்சி மற்றும் இத்தலார் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்ட நிலையில், 500க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவிலான விவசாய பயிர்கள் நீரில் மூழ்கின. மேலும், உள்ளாட்சி அமைப்புகள் பராமரிக்கும் உள்ளூர் சாலைகளும் துண்டிக்கப்பட்டு சேதம் அடைந்தன.

பின்னர், மாவட்ட நிர்வாகம் சார்பில், துண்டிக்கப்பட்ட சாலைகளுக்கு பதிலாக, தற்காலிக மாற்று சாலைகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டுள்ளது. மேலும், வீடுகள் இழந்தவர்களுக்கு நிவாரண தொகையும் வழங்கப்பட்டு, இத்தலார் அருகே, தற்காலிக குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. அவை விரைவில் வழங்கப்பட உள்ளன.

இந்நிலையில், மாவட்டத்தில் சேத மதிப்பீட்டை ஆராய்ந்த மாவட்ட நிர்வாகம், தேவையான நிதி வழங்க அரசிடம் கோரிக்கை விடுத்தது. இதனையடுத்து மாநில அரசு, 82 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. அதன்படி, நெடுஞ்சாலை துறைக்கு முதற்கட்டமாக, 50 கோடி ரூபாயும் தோட்டக்கலை துறைக்கு, 66 லட்சம் ரூபாய்; உள்ளாட்சி அமைப்புகளுக்கு, 1.9 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில், தோட்டக்கலைத் துறையினருக்கு, பயிர்பாதுகாப்பு செய்யப்பட்டிருந்த விவசாயிகளுக்கு, 'இன்சூரன்ஸ்' தொகையும் வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், தென்மேற்கு பருவ மழை பாதிப்பை சமாளிக்க, முதற்கட்டமாக, 82 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில், விரைவில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதுடன், விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையும் வழங்கப்படும்' என்று கூறினார்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....