கோவை: கோவை அவினாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் காவல்துறை இயக்குனர் திரிபாதி தலைமையில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

சமீபகாலமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மாவோயிஸ்ட்டுகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை அருகே உள்ள கேரள மாநிலமான பாலக்காடு மாவட்டத்தில் தண்டர்போல்ட் போலீசாருக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொள்ளப்பட்டனர். மேலும் அக்குழுவில் இருந்த மூன்று மாவோயிஸ்ட்டுகள் தப்பிச்சென்றனர்.
இதையடுத்து, தமிழக எல்லைப் பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்தினர். அதேபோல, மலை கிராமங்களில் வசித்து வரும் பழங்குடியின மக்களுக்கு மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் இருந்தால் போலீசாருக்கு தகவல் தரும்படி விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், கோவை வந்த தமிழக காவல் துறை இயக்குனர் திரிபாதி காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் சிறப்பு அதிரடிப்படை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு அதிரடிப்படை கண்காணிப்பாளர் மூர்த்தி உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், அயோத்தி தீர்ப்பு வெளிவர உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தவும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் ஆலோசனை வழங்கப்பட உள்ளதாக காவல்துறை வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர்.