திருப்பூர் அருகே வீடுகளில் திருட முயற்சி செய்த சிறுமியை பிடித்த அப்பகுதி பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர். சிசிடிவி காட்சிகளை கொண்டு தொடர்ந்து போலீசார் அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் அருகே வீடுகளில் திருட முயற்சி செய்த சிறுமியை பிடித்த அப்பகுதி பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர். சிசிடிவி காட்சிகளை கொண்டு தொடர்ந்து போலீசார் அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் அப்பாச்சி நகர் பகுதியில் சுமார் 500 குடியிருப்புகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் பின்னலாடை நிறுவனங்களில் உள்ள பொருட்கள் மற்றும் வீடுகளுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்கள் ஆகியவைகள் அடிக்கடி திருடப்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், அந்த பகுதியில் உள்ள ஒரு சிறுமி பூட்டிய வீட்டினுள் ஏறி உள்ளே குதிக்க முயன்றுள்ளார். இதனையறிந்த அப்பகுதி பொதுமக்கள், அந்த சிறுமியை பிடித்து வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
பின்னர் தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வடக்கு போலீசார், சிறுமியை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் திருப்பூர் அம்பேத்கர் நகர் பகுதியில் வசிக்கும் 15 வயது மதிக்கத்தக்க சிறுமி என்பது தெரியவந்தது. மேலும், அங்கு கிடைத்த சிசிடிவி காட்சி வைத்துத் தொடர்ந்து போலீசார் அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.