திருவள்ளுவருக்கு காவி துண்டு அணிவித்த விவகாரம்; அர்ஜுன் சம்பத்தை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தல்

கோவை: திருவள்ளுவருக்கு மத அடையாளங்களை அணிவித்த இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜீன் சம்பத்தினை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கோரி, திராவிடர் தமிழர் கட்சியினர் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.


கோவை: திருவள்ளுவருக்கு மத அடையாளங்களை அணிவித்த இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜீன் சம்பத்தினை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கோரி, திராவிடர் தமிழர் கட்சியினர் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

தஞ்சாவூரில் நேற்று திருவள்ளுவர் சிலைக்கு இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜீன்சம்பத் காவி துண்டு அணிவித்து, ருட்திராட்சை மற்றும் பட்டை அணிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



இந்நிலையில் சமூகத்தில் பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வரும் அர்ஜீன் சம்பத்தினை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி திராவிடர் தமிழர் கட்சியினர் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மேலும், புகார் அளிக்க வந்தவர்கள் திருவள்ளுவர் படங்கள் மற்றும் திருக்குறள் புத்தகத்தோடு வந்து மனு அளித்தனர்.



அனைவருக்கும் பொதுவானவரான திருவள்ளுவருக்கு இந்துமத அடையாளங்களை அர்ஜீன்சம்பத் புகுத்தி, திட்டமிட்டு பதட்டத்தை உருவாக்கும் வகையில் செயல்பட்டிருப்பதாகவும் அக்கட்சியினர் குற்றம்சாட்டிய அவர்கள், அர்ஜீன் சம்பத்தினை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...