கோவை: வால்பாறையில் பராமரிக்கப்படாமல் இருக்கும் சிறுவர் பூங்காவை சீரமைப்பதுடன் முட்புதர்களை அகற்றி, சாலைகளை அமைக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திற்கு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் நகராட்சி சார்பில் 2010ம் ஆண்டு பல லட்சம் செலவில் நகராட்சி சுற்றுலா மாளிகை அருகில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. இந்நிலையில், இப்பூங்கா முறையான பராமரிப்பு இல்லாததால் ஏராளமான முட்புதர்கள் வளர்ந்துள்ளன. இந்த புதர்களில் சிறுத்தைப்புலிகள் தஞ்சமடைந்துள்ளன.
இதனால், அப்பகுதி பொதுமக்கள், குழந்தைகளின் பாதுகாப்பு கருதி யாரும் பூங்காவிற்கு வருவதில்லை. மேலும், பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட விளையாட்டு சாதனங்கள், மின் விளக்குகள், நீர் தொட்டிகள் உடைந்து சேதமடைந்த நிலையில் பூங்காவிற்கு செல்லும் சாலையும் பழுதடைந்துள்ளது.

மேலும், சமூக விரோதிகள் இங்கு மது அருந்தி விட்டு பாட்டில்களை உடைத்து, இங்கேயே வீசி விட்டு செல்கின்றனர். குடித்த டம்ளர்கள் பாட்டில்கள் மட்டுமின்றி ஏராளமான குப்பைகள் சேர்ந்து கிடக்கின்றன. இங்குள்ள நிழற்குடைகள் மாடுகள், ஆடுகள் வளர்க்கும் இடமாக மாறியதோடு கழிப்பறையும் சேதமடைந்து கிடக்கின்றன.
இந்த நிலையில், நகராட்சி நிர்வாகம் பூங்காவை சீரமைப்பதுடன் முட்புதர்களை அகற்றவும், சாலையை பராமரிக்கவும், காவலர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.