கோவை: சொத்து வரி உயர்வு மற்றும் குடிநீர் விநியோகத்தை சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கியதற்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க சார்பில் வரும் 20ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் தெரிவித்தார்.

கோவை மாநகராட்சியில் குடிநீர் விநியோகம் மற்றும் பராமரிப்பு உரிமையை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சூயஸ் நிறுவனத்திற்கு 26 ஆண்டு காலத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதனை ரத்து செய்ய வலியுறுத்தியும் கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள குண்டும் குழியுமான சாலைகள், சுகாதார சீர்கேடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வு காணாத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து 20ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது குறித்து சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் பேசுகையில், 24 மணி நேர குடிநீர் விநியோகத்திற்கு தாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் சூயஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை கைவிட்டு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அல்லது மாநகராட்சி நிர்வாகமோ இதனை செயல்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
மேலும், கோவை மாநகரில் பெரும்பாலான பகுதிகளில் சாக்கடை கழிவுகள் அகற்றப்படாததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதற்கு மாநகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்து வரும் 20ம் தேதி தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன் திமுக மாநகர் மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.