நவம்பர் புரட்சி தினம்; கோவை சி.பி.எம் அலுவலகத்தில் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

கோவை: கோவையில் சி.பி.எம் அலுவலகத்தில் நவம்பர் புரட்சி தினத்தை முன்னிட்டு கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந்த நிகழ்வில் அக்கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கோவை: கோவையில் சி.பி.எம் அலுவலகத்தில் நவம்பர் புரட்சி தினத்தை முன்னிட்டு கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந்த நிகழ்வில் அக்கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கொடியேற்று விழா நிகழ்வுக்கு பின்னர் பேசிய ஜி.ராமகிருஷ்ணன், மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு மக்கள் பிரச்சினைகளை தீர்க்கவில்லை எனவும், 50 ஆண்டுகளில் இல்லாத வேலை இழப்பு, பொருளாதார பிரச்சினைகள் தற்போது ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

தமிழகத்தில் மலிவான விளம்பரத்திற்காக வள்ளுவர் சிலைக்கு காவி உடை போர்த்தி இந்து மக்கள் கட்சியை சேர்ந்த அர்ஜுன் சம்பத் அவமானப்படுத்தி இருக்கின்றார் எனவும் அர்ஜூன்சம்பத் மீது சாதாரண வழக்கு போடப்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர், அர்ஜுன் சம்பத் மீது பொது சொத்துக்கு சேதம் விளைவித்த பிரிவில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்களால் கொல்லப்பட்ட காந்தியை கொண்டாடுகின்றனர், அதேசமயம் பிறப்பால் ஏற்றத்தாழ்வுகளை கூடாது என்ற வள்ளுவருக்கு காவிசாயம் பூசுகின்றனர் என்று குற்றம்சாட்டிய அவர், இழிவான செயலில் சங்பரிவார் அமைப்பினர் ஈடுபடுவதாக கூறினார்.

மத்திய அரசின் கல்வி கொள்கையில் இந்தியை திணிக்கவும், கல்வியை தனியார் மயமாக்கவும் முடிவு செய்துள்ளதாகவும் குற்றம்சாட்டிய அவர், திருவள்ளுவருக்கு மதசாயம் பூசுவதும், காவி உடை அணிவித்து திருநீறு பூசுவதும், ருத்ராட்சம் அணிவிப்பது சரியானதல்ல என்று தெரிவித்தார்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....