கோவை: கோவையில் முஸ்கான், ரித்திக் ஆகியோர் கடத்தி கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு மனோகரனின் தூக்குத் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
கோவை: கோவையில் முஸ்கான், ரித்திக் ஆகியோர் கடத்தி கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு மனோகரனின் தூக்குத் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

கோவை ரங்கேகவுடர் வீதியைச் சேர்ந்த ஜவுளி வியாபாரி ரஞ்சித்தின் 11 வயது மகள் மற்றும் 8 வயது மகன் ஆகிய இருவரும் கடந்த 2010 அக்.29-ம் தேதி பள்ளிக்கு வாடகை வேனில் புறப்பட்டனர். அவர்களை, வேன் ஓட்டுநர் மோகன்ராஜ் (எ) மோகன கிருஷ்ணன், அவரது நண்பர் மனோகரன் ஆகியோர், பொள்ளாச்சி மலைப் பகுதிக்கு கடத்திச் சென்றனர்.
அங்கு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, இருவரையும் பிஏபி வாய்க்காலில் தள்ளி கொலை செய்துள்ளனர். இந்த வழக்கு தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கோவை வெரைட்டிஹால் ரோடு போலீஸார் வழக்கு பதிவு செய்து, மோகன்ராஜ், மனோகரனை கைது செய்தனர். கடந்த 2010 நவ.9-ம் தேதி விசாரணைக்காக அழைத்துச் சென்றபோது, போத்தனூர் அருகே போலீஸாரின் துப்பாக்கியைப் பிடுங்கி சுட்டுவிட்டு, தப்பியோட முயன்ற மோகன்ராஜை போலீஸார் சுட்டுக்கொன்றனர்.
மனோகரன் மீது கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், இரட்டை தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், சென்னை உயர் நீதிமன்றம் இந்த தண்டனையை உறுதி செய்தது. இந்த தீர்ப்புக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனோகரன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மனோகரனை தூக்கிலிட தடை விதித்து உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் குற்றவாளி மனோகரனுக்கு தூக்கு தண்டனை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
மேலும், சிறுமி பாலியல் வன்கொடுமை சிறுவன் கொலை வழக்கில் குற்றவாளி மனோகரின் சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.