கோவை: பொள்ளாச்சியில் வாகன தணிக்கையின் போது இருசக்கர வாகனத்தில் விதி மீறிச் சென்ற 3 இளைஞர்களை தடுத்து நிறுத்துவதற்காக, காவல் உதவி ஆய்வாளர் வாகனத்தின் மீது லத்தியை வீசிய சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 2 வாரங்களுக்குள் விளக்கமளிக்க மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோட்டூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சம்பந்தம் கோட்டூர் காவல் எல்லைக்குட்பட்ட சங்கம்பாளையம் பகுதியில் நவம்பர் 4ம் தேதி வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தார்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் அமர்ந்து வந்த இளைஞர்கள், போலீசார் வாகனத்தை நிறுத்த சொல்லியும் நிறுத்தாமல் சென்றனர். இதனால் சிறப்பு உதவி ஆய்வாளர் சம்பந்தம் என்பவர், இருசக்கர வாகனத்தின் மீது லத்தியை வீசியதாக கூறப்படுகிறது. அந்த லத்தி சக்கரத்தில் சிக்கியதால் நிலைதடுமாறி மூவரும் கீழே விழுந்தனர். இதில் சர்தார் அலி என்ற இளைஞரின் கால் எலும்பு முறிந்தது. மற்ற இருவரும் லேசான காயங்களுடன் தப்பினர்.
இதனையடுத்து, இளைஞர்கள் மீது தடியை வீசிய சம்பவத்தில் உதவி ஆய்வாளர் சம்பந்தத்தை பணியிடை நீக்கம் செய்ய கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், காவல் உதவி ஆய்வாளர் இருசக்கர வாகனத்தின் மீது லத்தியை வீசிய சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 2 வாரங்களுக்குள் விளக்கமளிக்க வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.