நீலகிரி: நீலகிரியில் கடந்த வாரம் முழுவதும் பெய்த பலத்த மழையின் காரணமாக அரசு தேயிலை ஏலத்தில் விலையில் ஏற்றம் இறக்கம் காணப்பட்டதாக வர்த்தகர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

குன்னூர் அரசு டீசர்வ் ஏலம் ஒவ்வொரு புதன் கிழமையும் குன்னூர் இன்ட்கோ தேயிலை ஏல மையத்தில் ஆன்லைன் மூலம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று நடைபெற்ற தேயிலை தூள் ஏலத்தில் நீலகிரியில் உள்ள 15 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் தேயிலைத் தூள் ஏலத்திற்கு வந்தன.

இதில், மூன்று லட்ச கிலோ வரை தேயிலை விற்பனைக்கு வந்தது. சராசரியாக தூள் ரகம் ரூபாய் 65 முதல் 85 வரையிலும், இலை ரகம் ரூபாய் 62 முதல் 75 வரையிலும் விற்பனையானது.
கடந்த வாரம் முழுவதும் பெய்த பலத்த மழையின் காரணமாக, தரத்தில் மாற்றம் இருந்ததால் விலையிலும் ஏற்றம் இறக்கம் காணப்பட்டதாக வர்த்தகர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.