கோவையில் அனுமதியின்றி தோண்டப்பட்ட ஆழ்துளை கிணறு: இட உரிமையாளர், கன்ஸ்டிரக்ஷன் நிறுவனத்தின் மீது அதிகாரிகள் நடவடிக்கை

கோவை: கோவை சரவணம்பட்டி அருகே அனுமதியின்றி ஆழ்குழாய் கிணறு அமைத்த பேராசிரியர் மற்றும் ஆழ்குழாய் கிணறு அமைத்த கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கோவை: கோவை சரவணம்பட்டி அருகே அனுமதியின்றி ஆழ்குழாய் கிணறு அமைத்த பேராசிரியர் மற்றும் ஆழ்குழாய் கிணறு அமைத்த கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.



கோவை சரவணம்பட்டி சத்தி சாலையில் பீளமேடு பகுதியைச் சேர்ந்த பேராசிரியர் பிரபாகரன் என்பவருக்கு சொந்தமாக இடம் உள்ளது. இந்த இடத்தில் அனுமதியின்றி ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ளதாக மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி சுரேஷ்க்கு தகவல் கிடைத்தது.



இதையடுத்து மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வுப் பணியை மேற்கொண்டார். இந்த ஆய்வில் அனுமதியின்றி ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. பின்னர், கோவை வடக்கு தாசில்தார் மகேஷ்குமாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். மேலும் ஆழ்குழாய் கிணறு அமைக்க அருகில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.



இதையடுத்து மாவட்ட வருவாய் துறை அதிகாரி, கோவை மாநகராட்சி வடக்கு மண்டல அதிகாரிகளை வரவழைத்து அனுமதி இன்றி ஆழ்குழாய் கிணறு அமைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனடிப்படையில், ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணியினை மேற்கொண்ட மகாலட்சுமி கன்ஸ்ட்ரக்சன், ஆழ்குழாய் கிணறு அமைக்கும் இடத்தின் உரிமையாளர் பிரபாகரன் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....