நீலகிரி : உதகை நகரில் சாலைகளில் சுற்றித்திரியும் குதிரைகளை தடுக்க நகராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் பொதுநல அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனனர்.

உதகை நகரில் மெயின்பஜார், கமர்ஷியல், ஏ.டி.சி., சேரிங்கிராஸ், தாவரவியல் பூங்கா, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மருத்துவமனை சாலைகள் என சமீபகாலமாக மாடுகள், குதிரைகள் சுற்றித்திரிந்து வருகிறது.
இதில் இருசக்கர வாகன ஓட்டிகள் பலரும் விபத்தில் சிக்கினர். இதனால், நகரில் சுற்றித்திரியும் கால்நடைகள், குதிரைகளை கட்டுப்படுத்த, பொதுநல அமைப்பினர் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து நகரில் கண்ட இடத்தில் சுற்றித்திரிவதை தடுக்க, குதிரைகளை பதிவு செய்து, குதிரையின் உரிமையாளர்களுக்கு 'டோக்கன்' வழங்க வேண்டும்' என அறிவுறுத்தப்பட்டது.
இதில், சில குதிரைகளுக்கு மட்டுமே பதிவு செய்து 'டோக்கன்' பெற்ற நிலையில், பெரும்பாலான குதிரைகளை பதிவு செய்யவில்லை. இதை நகராட்சி நிர்வாகமும் கண்டுகொள்ளவில்லை

இந்நிலையில், நகரில் முக்கிய சாலைகளில் மீண்டும் மக்கள், வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக குதிரைகள், கால்நடைகள் அதிகளவில் உலா வருவதை தடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.