கர்நாடகாவில் இருந்து கோவைக்கு கடத்திய ரூ.9 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்; 3 பேர் கைது

கோவை: கோவை சரவணம்பட்டி அருகே கடத்தப்பட இருந்த 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை: கோவை சரவணம்பட்டி அருகே கடத்தப்பட இருந்த 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை சத்தி ரோட்டில்‌ உள்ள சரவணம்பட்டி சோதனை சாவடியில்‌ நேற்று போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, TN 38 CS 9402 என்ற எண் கொண்ட காரை மடக்கி போலீஸார் நடத்திய சோதனையில், கர்நாடகாவில்‌ இருந்து கொள்முதல்‌ செய்து, கோவையில்‌ விற்பனை செய்ய கொண்டுவரப்பட்ட, தமிழக அரசால்‌ தடைசெய்யப்பட்ட மனித உயிரிக்கு ஆபத்தை விளைவிக்கும்‌ பொருட்களான தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து சுமார் 9 லட்சம் மதிப்பிலான 21 மூட்டைகளில் கடத்தப்பட்ட குட்கா பொருட்கள், ரூ.59700 மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக கிருஷ்ணகுமார்‌(27), ஷ்யாம்குமார்‌(26) மற்றும் வாகனத்தை ஓட்டி வந்த மைக்கேல்‌(28) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...