கோவை: கோவை சரவணம்பட்டி அருகே கடத்தப்பட இருந்த 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை சத்தி ரோட்டில் உள்ள சரவணம்பட்டி சோதனை சாவடியில் நேற்று போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, TN 38 CS 9402 என்ற எண் கொண்ட காரை மடக்கி போலீஸார் நடத்திய சோதனையில், கர்நாடகாவில் இருந்து கொள்முதல் செய்து, கோவையில் விற்பனை செய்ய கொண்டுவரப்பட்ட, தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட மனித உயிரிக்கு ஆபத்தை விளைவிக்கும் பொருட்களான தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அடுத்து சுமார் 9 லட்சம் மதிப்பிலான 21 மூட்டைகளில் கடத்தப்பட்ட குட்கா பொருட்கள், ரூ.59700 மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக கிருஷ்ணகுமார்(27), ஷ்யாம்குமார்(26) மற்றும் வாகனத்தை ஓட்டி வந்த மைக்கேல்(28) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.