பவானி ஆற்று வெள்ளத்தில் மூழ்கிய உயர் மட்ட பாலம்; இன்று முதல் துவங்கியது இலவச மோட்டார் படகு போக்குவரத்து

கோவை: மேட்டுப்பாளையம் அருகே தண்ணீரில் மூழ்கி போக்குவரத்து துண்டித்த கிராமங்களுக்கு இன்று முதல் மோட்டார் படகு போக்குவரத்து துவங்கியது.

கோவை: மேட்டுப்பாளையம் அருகே தண்ணீரில் மூழ்கி போக்குவரத்து துண்டித்த கிராமங்களுக்கு இன்று முதல் மோட்டார் படகு போக்குவரத்து துவங்கியது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை அருகே உள்ள காந்தவயல் பகுதியானது பவானிசாகர் அணையின் நீர்த் தேக்க பகுதியில் அமைந்துள்ளது. இங்கு சுமார் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வரும் நிலையில், தற்போது பவானி சாகர் அணையில் 104 அடி வரை தண்ணீர் தேங்கியுள்ளதால் காந்தவயல் கிராமத்தையும் லிங்காபுரத்தையும் இனைக்கும் பாலம் உயர் மட்ட பாலமானது தண்ணீரில் மூழ்கியுள்ளது.

மேலும், இனைப்பு சாலைகள் முழுவதும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் காந்தவயல், உளியூர், ஆலூர் கிராமத்திற்கான சாலை போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு பரிசல் மூலம் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி குழந்தைகள், பணிக்கு செல்வோர் என அனைவரும் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமலும் 50 அடி ஆழம் உள்ள இந்த நீர் தேக்கத்தில் எவ்வித பாதுகாப்புமின்றி பரிசலில் பயணித்து வந்தனர்.



இதனையடுத்து நேரில் பார்வையிட்ட கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி, இதற்கு தீர்வு காணும் வகையில் தண்ணீர் வற்றும் வரை பாதுகாப்பாக கிராம மக்கள் சென்று வர மோட்டார் படகு இயக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் இருந்து நேற்று டீசல் மூலம் இயங்கும் மோட்டார் படகு காந்தவயல் கொண்டுவரப்பட்டது. இதனை இன்று மக்கள் பயன்பாட்டிற்காக அளிக்கும் நிழ்வு நடைபெற்றது. மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஓ.கே சின்னராஜ் மோட்டார் படகு பயணத்தை துவக்கி வைத்தார்.



பின்னர், லைப் ஜாக்கெட் அணிந்து பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் பணிக்கு செல்வோர் என அனைவரும் இந்த படகில் உற்சாகமாக பயணித்தனர். ஒரே சமயத்தில் முப்பது பேர் வரை பயணிக்கும் வகையில் முற்றிலும் இலவமாக எவ்வித கட்டணமும் இல்லாமல் சிறுமுகை பேரூராட்சி மூலம் இந்த படகு சேவை இயக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து காந்தவயல் பகுதியில் தேங்கியுள்ள தண்ணீர் வற்றும் வரை இந்த இலவச சேவை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...