திருப்பூரில் கர்ப்பிணி பெண்ணிற்கு ஏற்பட்ட குளுக்கோஸ் மருந்தில் புழு; உறவினர்கள் குற்றச்சாட்டு

திருப்பூர்: திருப்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்ணிற்கு ஏற்பட்ட குளுக்கோஸ் மருந்தில் புழு மற்றும் பஞ்சு போன்ற கிருமிகள் மிதப்பதாக பெண்ணின் உறவினர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்: திருப்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்ணிற்கு ஏற்பட்ட குளுக்கோஸ் மருந்தில் புழு மற்றும் பஞ்சு போன்ற கிருமிகள் மிதப்பதாக பெண்ணின் உறவினர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசாவை சேர்ந்த ஜெகன் (28) என்பவர் தனது மனைவி தேவி (24) என்பவருடன் திருப்பூரில் பழைய ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் வசித்து வருகிறார். இவர் கேரளாவைச் சேர்ந்த ஜோசப் என்பவரது உணவகத்தில் குடும்பத்துடன் பணியாற்றி வருகிறார்.



இந்நிலையில், 3 மாதம் கர்ப்பமாக இருந்த தேவிக்கு, ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் அமைந்துள்ள நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, அங்கு அவருக்கு குளுக்கோஸ் செலுத்தப்பட்டு வந்தது. அப்போது, சிகிச்சை பெற்று வரும் தேவியை, ஜெகன் சென்று பார்த்த போது, குளுக்கோஸில் புழு மற்றும் பஞ்சு போன்ற கிருமிகள் மிதந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், மொழி பிரச்சனை காரணமாக ஜோசப்பிடம் தெரிவித்துள்ளார்.

பின்னர், அங்கு பணியில் இருந்த மருத்துவர்களிடம் இதுகுறித்து கேட்டபோது, அலட்சியமாக பதில் அளித்ததாக கூறிய ஜோசப், பொருளாதாரத்தில் பின்தங்கிய பலர், இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை சார்ந்துள்ள நிலையில் அலட்சியமாக மருத்துவம் பார்க்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.

இதனையடுத்து, தேவிக்கு செலுத்தப்பட்டு வந்த குளுக்கோஸ் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த மாநகர் நல அலுவலர் பூபதி, அங்கு வைக்கப்பட்டிருந்த மருத்துவ பொருட்களை ஆய்வு செய்தார். பின்னர், அங்கு பணியில் இருந்த மருத்துவர் மற்றும் செவிலியர்கள் இடமும் விசாரணை மேற்கொண்ட அவர், பாதிக்கப்பட்டவர்களிடம் பேசிய பின்னர் துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

கர்ப்பிணி பெண்ணிற்கு செலுத்தப்பட்ட குளுக்கோஸ் பாட்டிலில் கிருமிகள் இருந்ததாக எழுந்த புகாரை அடுத்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

Newsletter

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...