கோவை: டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க வால்பாறை நகராட்சி சார்பில் வால்பாறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு நில வேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறையில் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க பல்வேறு துறைகள் சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக வால்பாறை நகராட்சி ஆணையாளர் சரவணபாபு அறிவுறுத்தலின் படி வால்பாறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு நில வேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கு பெற்ற இந்த நிகழ்வில், தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் ரகுபதி தலைமையில் மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. திட்ட பரப்புரையாளர்கள் பிரசன்னா, சசிகலா, பத்மா, துளசிமணி, ஜெயஸ்ரீ ஆகியோர் சுற்றுப்புற சுகாதாரத்தின் அவசியம் வழிமுறைகள் குறித்து மாணவிகளுக்கு விளக்கி கூறினர்.