கோவை: பணிநிரந்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை டாடாபாத் தமிழ்நாடு மின்வாரிய மண்டல தலைமை அலுவலகம் முன்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட மின்வாரிய ஒப்பந்த பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

தமிழகம் முழுவதும் 8500க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு மின்வாரியத்தில் பணிபுரிந்து வருகின்றனர். பணிநிரந்தரம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 1ம் தேதி முதல் மின்வாரிய ஒப்பந்த பணியாளர்கள் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று கோவை டாடாபாத் மின்வாரிய அலுவலகம் முன்பு மின்வாரிய ஒப்பந்த பணியாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மின் வாரியத்தில் 1998 முன்பு பணியில் சேர்ந்த ஒப்பந்த பணியாளர்களுக்கு கள உதவியாளர் பணி வழங்க வேண்டும், 2008 ம் ஆண்டுக்கு முன்பு ஒப்பந்த பணியில் சேர்ந்தவர்களுக்கு தினக்கூலியாக 380 வழங்க வேண்டும், 2008ம் ஆண்டுக்கு பின்பு ஓப்பந்தபணியாளராக சேர்ந்தவர்களுக்கு கோல்மேன் பணி தேர்வுகள் இல்லாமல் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.

இதனையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மறியல் போராட்டம் காரணமாக மின்வாரிய அலுவலகம் முன்பு ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டு இருந்தனர்.