விரைவில் அயோத்தி வழக்கில் தீர்ப்பு; வரும் நவ., 10ம் தேதி முதல் காவல்துறையினருக்கு விடுப்பு இல்லை - டிஜிபி உத்தரவு

அயோத்தி வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு பணிகளுக்காக தமிழகம் முழுவதும் போலீசார் தயார் நிலையில் இருக்க அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் தமிழக டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அயோத்தி வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு பணிகளுக்காக தமிழகம் முழுவதும் போலீசார் தயார் நிலையில் இருக்க அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் தமிழக டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வரும் 17-ம் தேதி ஓய்வு பெறுகிறார். அதற்கு முன்பாக அயோத்தி வழக்கில் இறுதித் தீர்ப்பு வெளியாக வாய்ப்புள்ளது என்று உச்ச நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன் காரணமாக உத்தர பிரதேசம் மட்டுமன்றி அனைத்து மாநிலங்களும் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழக டிஜிபி திரிபாதி காவல்துறையில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் சட்டம் ஒழுங்கு பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக, தேர்தல் சமயத்தில் இருப்பதைப் போன்று தயார்நிலையில் இருக்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 

மேலும், நவம்பர்‌ 10 தேதி முதல்‌ மறு உத்தரவு வரும்‌ வரை காவல்துறை அதிகாரிகள்‌ மற்றும்‌ காவலர்கள்‌ விடுப்பு எடுக்கக்‌ கூடாது என டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்‌. மேலும்‌, சட்டம்‌ ஒழுங்கு பணிக்கு வெவ்வேறு இடங்களுக்கு செல்ல தயார் நிலையில்‌ இருக்கும்படியும்‌ உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....