கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு, மேற்கு மண்டலங்களுக்குட்பட்ட வார்டு எண்.86, 25, 81, 84 ஆகிய பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தெற்கு மண்டலம், 86-வது வார்டுக்குட்பட்ட கரும்புக்கடை சாரமேடு பகுதியில் துப்புரவுப் பணியாளர்கள் தேவையில்லாத பொருட்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும், மாநகராட்சி உக்கடம் ஆடு அறுவைமனையின் பணிகளையும் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் நேரில் பார்வையிட்டார்.

பின்னர், மத்திய மண்டலம், 81-வது வார்டு வெறைட்டி ஹால் ரோடு பகுதியில் தோட்டக்கழிவுகள், மக்கும் குப்பைகள் கொண்டு நுண்ணுயிர் உரம் (Micro Composting Centre) தயாரிக்கும் மையத்தினையும், 84-வது வார்டு கெம்பட்டி காலனி பகுதியிலுள்ள முதியோர் தங்கும் விடுதியில் குடிநீர் விநியோகம், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும், மேலும் 25-வது வார்டுக்குட்பட்ட சுக்கிரவார்பேட்டை பகுதியில் துப்புரவுப் பணியாளர்கள் பாதாள சாக்கடைக் கழிவுகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு செய்தார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலம், 86-வது வார்டுக்குட்பட்ட உக்கடம் ஆடுஅறுவைமனையினை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் திரு.ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். மாநகராட்சி துணை ஆணையாளர் திரு.ச.பிரசன்னா ராமசாமி அவர்கள் மற்றும் அலுவலர்கள் உடனுள்ளார்கள்.

மத்திய மண்டலம், 25-வது வார்டுக்குட்பட்ட சுக்கிரவார்பேட்டை பகுதியில் பாதாள சாக்கடைக்கழிவுகளை கழிவநீர் சுத்திகரிப்பு வாகனம் மூலம் அகற்றும் பணிகள் நடைபெறுவதை மாநகராட்சி ஆணையாளர் நேரில் பார்வையிட்டார்.

மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலா் ஷ்ரவன்குமார் ஜடாவத் அவர்கள் உத்தரவின்படி, மத்திய மண்டல உதவி ஆணையர் மகேஷ் கனகராஜ் அவர்கள் மத்திய மண்டலத்திற்குட்பட்ட ராஜவீதி பகுதியிலுள்ள மொத்த வியாபார கடைகளில் 50 மைக்ரான் குறைவாக உள்ள 500 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட கடை உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

அடுத்து, தெற்கு மண்டலம், 76-வது வார்டில் லாலா காடன் குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றிட மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் அவர்கள் நேரில் பார்வையிட்டு சம்மந்தப்பட்ட அலுவலார்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது, மாநகராட்சி துணைஆணையாளர்,.ச.பிரசன்னா ராமசாமி, மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன், தெற்கு மண்டல உதவி ஆணையர் டி.ஆர்.ரவி, மத்திய மண்டல உதவி ஆணையா் மகேஷ்கனகராஜ், மண்டல சுகாதார ஆய்வாளர் குணசேகரன் ஆகியோர் உடனிருந்தார்கள்.