பவானி ஆற்று வெள்ளத்தால் நீரில் மூழ்கிய 30,000 வாழை மரங்கள்; விவசாயிகள் கவலை

கோவை: மேட்டுப்பாளையம் பவானி ஆற்று வெள்ளத்தால் சுமார் 30,000க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கோவை: மேட்டுப்பாளையம் பவானி ஆற்று வெள்ளத்தால் சுமார் 30,000க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை இவ்வாண்டு பருவமழை காரணமாக நிரம்பியதை அடுத்து, அதிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு உபரி தண்ணீரானது பவானி ஆற்றில் வழியே பவானிசாகர் அணையை அடைந்து வருகிறது. மேலும் பவானி சாகர் அணையின் முக்கிய நீராதாரமாக மயாறு போன்றவற்றிலும் தண்ணீர் அதிக அளவில் வருவதால் பவானி சாகர் அணை அதன் முழு கொள்ளவை எட்டியதால் அதன் நீர் தேக்க பகுதியில் தண்ணீரானது தேங்கி கடல் போல் காட்சி அளிக்கிறது.



இதனால் நீர் தேக்க பகுதி கிராமங்களான காந்தவயல், ஆலூர், உளியூர் கிராமத்தை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இந்த கிராம பகுதிகளை நகரத்துடன் இனைக்கும் லிங்காபுரம் காந்தவயல் உயர் மட்ட பாலம் தண்ணீரில் மூழ்கியதால் போக்குவரத்தானது முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், பவானி சாகர் அணை நீர் தேக்க பகுதியில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 30,000க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தண்ணீர் சூழ்ந்து முழுவதும் தண்ணீரில் மூழ்கி உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.



வச்சினம்பாளையம், லிங்காபுரம், திம்மராயம்பாளையம், பழத்தோட்டம் போன்ற பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த நேந்திரன், கதிலி உள்ளிட்ட ஏராளமான வாழைகள் தற்போது தண்ணீரில் மூழ்கி மிதக்கின்றன. ஒரு வாழைக்கு சுமார் 120 ரூபாய் வரை செலவு செய்து அறுவடைக்காகக் காத்திருந்த நிலையில், தற்போது அவ்வாழைகள் முழுவதும் தண்ணீரில் மூழ்கி உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....