நீலகிரி: முதுமலை வளர்ப்பு யானைகளுக்கு தொரப்பள்ளி வனத்துறை சோதனைச் சாவடியில், பருவமழைக்கு பிந்தைய எடை பரிசோதனையில் மிகவும் சிறிய மற்றும் வயது முதிர்ந்த 14 யானைகளுக்கு எடை பரிசோதனை செய்யப்பட்டது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு, பாம்பேக்ஸ் மற்றும் ஈட்டி மரம் உள்ளிட்ட மூன்று வளர்ப்பு யானைகள் முகாமில் 27 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த யானைகளுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எடை பரிசோதனை மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

இந்நிலையில், தென்மேற்கு பருவமழை நிறைவடைந்ததை அடுத்து பருவமழைக்கு பிந்தைய எடை பரிசோதனை நேற்று தொரப்பள்ளி வனத்துறை சோதனைச் சாவடியில் மேற்கொள்ளப்பட்டது. இதில் மிகவும் சிறிய மற்றும் வயது முதிர்ந்த 14 யானைகளுக்கு எடை பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் வழக்கம் போலவே, யானைகளின் எடை அதிகரித்து அவற்றின் ஆரோக்கியம் அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக, கடந்த ஜனவரி மாதம் முகாமுக்கு மீண்டும் கொண்டுவரப்பட்ட 13 வயதுள்ள மசினி யானை தற்போது 2640 கிலோ எடை உள்ளதாகவும் முகாமுக்குக் கொண்டு வரப்பட்டபோது, இந்த யானையின் எடை 1900 கிலோவாக இருந்ததாகவும், தற்போது இந்த யானையின் உடல் எடை அதிகரித்து நல்ல ஆரோக்கியமாக இருப்பதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.