பொள்ளாச்சி ஆழியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

கோவை: கோவை மாவட்டம்‌, ஆனைமலை வட்டம்‌, ஆழியாறு அணையிலிருந்து இன்று (நவ., 4) விவசாயிகளின்‌ பயன்பாட்டிற்காக தண்ணீரை, நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி அவர்கள்‌ மலர்‌ தூவி திறந்து வைத்தார்‌.


கோவை: கோவை மாவட்டம்‌, ஆனைமலை வட்டம்‌, ஆழியாறு அணையிலிருந்து இன்று (நவ., 4) விவசாயிகளின்‌ பயன்பாட்டிற்காக தண்ணீரை, நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி அவர்கள்‌ மலர்‌ தூவி திறந்து வைத்தார்‌.

பின்னர்‌ அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி பேசுகையில்‌, தமிழக முதலமைச்சர்‌ அவர்களின்‌ குடிமராமத்து திட்டத்தினை கோவை மாவட்டம்‌ முழுவதும்‌ சிறப்பாக செயல்படுத்தியதன்‌ விளைவாக, நகரப்பகுதிகள்‌, ஊரக பகுதிகள்‌ என அனைத்து பகுதிகளிலும்‌ உள்ள ஏரிகள்‌, குளங்கள்‌, குட்டைகள்‌ என அனைத்தும்‌ நீர்‌ நிரம்பி உள்ளது. இதனால்‌ விவசாயிகள்‌ அதிகளவில்‌ பயன்பெறும்‌ வகையில்‌ உள்ளது.

அதனடிப்படையில்‌, பாசனப்‌ பகுதிகளுக்கு ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர்‌ திறந்துவிடக்‌ கோரி பரம்பிக்‌ குளம்‌ ஆழியாறு திட்ட ஆழியாறு படுகை புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள்‌ சங்கத்தினர்‌ உள்ளிட்ட வேளாண்‌ பெருங்குடி மக்களின்‌ கோரியினை ஏற்று தமிழக முதலமைச்சர்‌, ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர்‌ திறந்துவிட கடந்த நவம்பர் 2ம் தேதியன்று உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், இன்று (நவ., 4) முதல்‌ பொள்ளாச்சி வட்டத்தில்‌ உள்ள பொள்ளாச்சி கால்வாய்‌ “ஆ” மண்டலத்தில்‌ 5621 ஏக்கர்‌ பாசனப்‌ பகுதிகளுக்கும்‌, ஆனைமலை வட்டத்தில்‌ உள்ள பொள்ளாச்சிக்‌ கால்வாய்‌ “ஆ” மண்டலத்தில்‌ 6321 ஏக்கர்‌ பாசனப்‌ பகுதிகளுக்கும்‌, வேட்டைக்காரன்புதூர்‌ கால்வாய்‌ “அ” மண்டலத்தில்‌ 5558 ஏக்கர்‌ பாசனப்‌ பகுதிகளுக்கும்‌, சேத்துமடைக்‌ கால்வாய்‌ “ஆ” மண்டலத்தில்‌ 2529 ஏக்கர்‌ பாசனப்‌ பகுதிகளுக்கும்‌, ஆழியார்‌ ஊட்டுக்‌ கால்வாய்‌ “ஆ” மண்டலத்தில்‌ 2303 ஏக்கர்‌ பாசனப்‌ பகுதிகளுக்கும்‌ என மொத்தம்‌ 22332 ஏக்கர்‌ பாசனப்‌ பரப்புள்ள பூமிகளுக்கு 135 நாட்களில்‌ உரிய இடைவெளி விட்டு 70 நாட்களுக்கு மொத்தம்‌ 2250 மில்லியன்‌ கனஅடிக்கு மிகாமல்‌ தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மேலும்‌, ஆழியாறு அணையிலிருந்து எலவக்கரை குளத்திற்கு, மொத்தம்‌ 250 ஏக்கர்‌ பாசனப்‌ பரப்புள்ள பூமிகளுக்கு 11 நாட்களுக்கு 57 மில்லியன்‌ கன அடிக்கு மிகாமல்‌ தண்ணீர்‌ திறந்துவிடப்பட்டுள்ளது.

இதன்‌ மூலம்‌, பொள்ளாச்சி மற்றும்‌ ஆனைமலை வட்டங்களில்‌ உள்ள விவசாய நிலங்கள்‌ பாசன வசதி பெறும்‌. மேலும்‌, விவசாயப்‌ பெருமக்கள்‌ நீரை சிக்கமான பயன்படுத்தி, நீர்‌ மேலாண்மையை மேற்கொண்டு அதிக அளவில்‌ மகசூல்‌ பெறவேண்டும்‌ என நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி தெரிவித்தார்‌.



இந்நிகழ்ச்சியில்‌ சட்டப்பேரவைத்‌ துணைத்‌ தலைவர்‌ பொள்ளாச்சி வி.ஜெயராமன்‌, மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி, சட்டமன்ற உறுப்பினர்‌ கஸ்தூரி வாசு, வருவாய்‌ கோட்டாட்சியர்‌(பொள்ளாச்சி) ரவிக்குமார்‌, பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர்‌ முத்துசாமி, உதவி செயற்பொறியாளர்‌ லீலா, அரசு அலுவலர்கள்‌ மற்றும்‌ விவசாயிகள்‌ உட்பட பலர்‌ கலந்துகொண்டனர்‌.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....