ஆனைகட்டி அருகே வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 6 பேர் கைது; 4 கள்ள துப்பாக்கிகள் பறிமுதல்

கோவை : கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே வன விலங்குகளை வேட்டையாடுவதற்கு கள்ளத் துப்பாக்கிகள் வைத்திருந்த 6 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.


கோவை : கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே வன விலங்குகளை வேட்டையாடுவதற்கு கள்ளத் துப்பாக்கிகள் வைத்திருந்த 6 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

ஆனைகட்டி அருகே அதிகாலை நேரங்களில் துப்பாக்கியுடன் காட்டுக்கு சென்று வனவிலங்குகளை வேட்டையாடுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த நிலையில், வனத்துறையினரின் ரோந்துப் பணியில் ஈடுபட்ட போது, ஆனைகட்டி மலைப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற தூமனூரைச் சேர்ந்த எல்.சடயன் (53), ஆலமரமேடு பகுதியை சேர்ந்த கே.பொன்னுசாமி (75), சி.மருதன் (65), சி.முருகன் (37), கண்டிவழியை சேர்ந்த சி.ரங்கசாமி (57) மற்றும் ஜம்புகண்டியைச் சேர்ந்த கே.நஞ்சப்பன் (33) ஆகியோரை கைது செய்தனர்.

மேலும், அவர்களிடமிருந்த 4 துப்பாக்கிகளை பறிமுதல் செய்த வனத்துறையினர், அவர்கள் 6 பேரையும் ஆனைகட்டி போலீசாரிடம் ஒப்படைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....