சூலூரில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை; நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் பெண்ணின் உறவினர்கள் மனு

கோவை : சூலூரில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கோவை : சூலூரில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கோவை மாவட்டம் சூலூரை சேர்ந்த 25 வயது மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை அதே பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர்கள் கொடுத்த புகார் அடிப்படையில் சூலூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள கணேசனை தேடி வருகின்றனர்.



இந்த நிலையில், தனக்கு கொலை மிரட்டல் விடுவதாக அதே பகுதியை சேர்ந்த நபர்கள் மீது கணேசன் புகார் அளித்துள்ளார். இந்த புகார் அடிப்படையில் மனோஜ், தேவராஜ், சங்கரன் ஆகிய மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்ட கணேசனை கைது செய்யாமல் அவரிடமிருந்து பெற்ற பொய்யான புகாரை பெற்று தங்கள் பகுதியை சேர்ந்த நபர்கள் மீது வழக்கு பதிவு உள்ளதாக குற்றம் சாட்டிய பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர், மாதர் சங்கத்தினருடன் சேர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். மேலும், உடனடியாக கணேசனை கைது செய்ய வேண்டும் எனவும் பொய் வழக்கை திரும்பப்பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

Newsletter

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...