கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு பட்டா வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் மனு

கோவை : ஆலய நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு பட்டா செய்து கொடுக்கவும் தனியாருக்கு விற்கவும் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளதாகவும் இதனை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி இந்து முன்னணி மாவட்ட தலைவர் தசரதன் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.


கோவை : ஆலய நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு பட்டா செய்து கொடுக்கவும் தனியாருக்கு விற்கவும் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளதாகவும் இதனை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி இந்து முன்னணி மாவட்ட தலைவர் தசரதன் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.



பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவ்வமைப்பினர் பேசுகையில், தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான ஆலயங்கள், ஆலய பராமரிப்பிற்கு வழங்கப்பட்ட இடங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு பட்டா வழங்க தமிழக அரசு ஆணை பிறபித்து உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாண பத்திரத்திலும் மேற்கண்டவாறு கூறியுள்ளது.

ஆலய நிலயங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கே விற்பதற்கு எடுத்துள்ள முடிவை கைவிட்டு, அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாண வாக்குமூலத்தை திரும்ப பெற வேண்டும் எனவும் இந்து முன்னணியினர் வலியுறுத்தினர்.



இதேபோல, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் 500க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மேலும், தமிழக அரசு இந்த அரசாணையை திரும்பப்பெறாவிட்டால் பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....