சூலூர் அருகே இருசக்கர வாகனம் மீது 108 ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு

கோவை : கோவை சூலூர் அருகே 108 ஆம்புலன்ஸ் வாகனம் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை : கோவை சூலூர் அருகே 108 ஆம்புலன்ஸ் வாகனம் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சூலூர் மதியழகன் நகரைச் சேர்ந்தவர்கள் விக்ரம்(24) மற்றும் சதீஷ்குமார்(23). இவர்கள் இருவரும் பெயிண்டிங் தொழிலில் செய்து வருகின்றனர். இந்த நிலையில், இவர்கள் இருவரும் வழக்கம் போல பணி முடிந்து, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது, சூலூர் பேருந்து நிலையம் எதிரே பல்லடத்தில் இருந்து வந்து கொண்டிருந்த 108 ஆம்புலன்ஸ் வாகனம், இரண்டு இளைஞர்கள் வந்து கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதையடுத்து தகவலறிந்து வந்த சூலூர் போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

Newsletter

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...