கோவை : கோவை தடாகம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ய முயன்ற நபரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

சமீபகாலமாக கோவை அதிகரித்து வரும் கஞ்சா விற்பனையானது, கல்லூரி மாணவர்கள் மற்றும் வடமாநிலத்தவரை குறிவைத்து நடைபெற்று வருகிறது. மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் பெரியய்யா உத்தரவின் பேரில் மாநகர மற்றும் மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் கஞ்சா விற்பனையாளர்களை கண்காணித்து கைது செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், தடாகம் செங்கல் சூளைகளில் பணிபுரியும் வடமாநிலத்தவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இதனையடுத்து, ஆய்வாளர் பாலமுரளி உத்தரவின் பேரில் நேற்று தடாகம் பகுதியில் உள்ள தடுப்பணை அருகே சந்தேகத்திற்கிடமாக சென்று கொண்டிருந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை செய்ததில், அவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்பவர் என தெரியவந்தது.
இதையடுத்து, தடாகம் போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், அவர் கணுவாய் பகுதியை சேர்ந்த ராமசாமியின் மகன் பன்னீர்செல்வம் (34) என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரிடம் இருந்த 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.