தென்னிந்திய நுாற்பாலைகளின் சங்கமான சிஸ்பா தனது வெள்ளிவிழாவை இன்று கொண்டாடுகிறது. இதையொட்டி சிஸ்பாவிற்கென சுமார் 6,000 சதுரஅடி அளவில் ஒரு நவீன சொந்த கட்டிடம் உருவாக்கப்பட்டு அதில் தரை தளத்தில் சிஸ்பா அலுவலகம் மற்றும் பஞ்சு மற்றும் நூல் தர ஆய்வு கூடம் அமைக்கபட உள்ளது. மேலும் முதல் தளத்தில் சுமார் 150 நபர்கள் அமரக்கூடிய நவீன குளிர்சாதன வசதியுடன் கூட்ட அரங்கு ஒன்றும்அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வெள்ளி விழாவின் கட்டிட திறப்பு விழா இன்று கோவை கோல்டு வின்ஸ் பகுதியில் நடைபெற்றது. லஷ்மி மெஷின் வொர்க்ஸின் தலைவர் சஞ்சய் ஜெயவர்தனவேலு கட்டிடத்தை திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து கோவை லீ மெரிடியன் ஹோட்டலில் வெள்ளி விழா நிகழ்ச்சியின் பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய சஞ்சய் ஜெயவர்தனவேலு இந்திய நூலின் தரம் சர்வதேச அளவிற்கு உயர வேண்டும் எனவும் அவ் உயர்வின் மூலம் நூல் ஏற்றுமதி உயர வழிவகுக்கும் என்றார். நூற்பாலைகள் நவீன படுத்துவதன் மூலம் தான் சிறந்த நூல் தரம், குறைந்த உற்பத்தி செலவுகளை அடைய முடியும் என்றார்
இந்நிகழ்ச்சியில் சிஐஐ தலைவர் டி. ராஜ்குமார், சைமா தலைவர் அஸ்வின் சந்திரன், டாஸ்மா தலைவ்வர் ஏ.பி. அப்புக்குட்டி, உள்ளிட்டோருடன் சிஸ்பா சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.